Categories
தேனி மாவட்ட செய்திகள்

வாக்கு எந்திரங்களை குதிரையில் ஏற்றி சென்ற அதிகாரிகள்…. துப்பாக்கி ஏந்தி காவல்துறையினர் பாதுகாப்பு…. தேனியில் சூடுபிடிக்கும் தேர்தல் களம்….!!

தேனியில் மலைக் கிராமத்திலிருக்கும் வாக்குச் சாவடிக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் குதிரையில் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் குழு அனைத்து வாக்குச்சாவடி மையங்களுக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தலைமையில் வாக்குப்பதிவு எந்திரங்களை அனுப்பி வைத்தது. இந்நிலையில் தேனி மாவட்டம் போடி தொகுதியிலிருக்கும் மலைப் பகுதி கிராமங்களில் 463 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

இவர்கள் வாக்களிக்க ஏதுவாக ஊத்துக்காடு கிராமத்தில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஊத்துக்காட்டிற்கு செல்ல சாலை வசதி இல்லை. இதனால் வாக்குச்சாவடி அதிகாரிகள் வாக்குப்பதிவு எந்திரத்தை துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர்களுடன் குதிரையில் ஏற்றிக்கொண்டு 8 கிலோமீட்டர் தூரம் நடந்து  சென்றுள்ளனர்.

Categories

Tech |