ரஷ்ய வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்க அமெரிக்கா உதவிக்கரம் நீட்டியுள்ளது.
ரஷ்யாவின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளின் சைபீரியா ,அல்டாய், ஸ்ஹெலிஐபின்ஸ் உள்ளிட்ட இடங்களில் 3 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவு நிலங்களில் காட்டுத் தீ பரவியது. இதனால் பல்வேறு மாகாணங்களில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு ராணுவ வீரர்களை கொண்டு தீயை அணைக்கும் பணிதீவிரமாக நடைபெற்று வருகிறது .
இந்நிலையில் ரஷ்ய அதிபரை தொடர்பு கொண்டு பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் சைபீரிய வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்க உதவுவதாகக் கூறினார். இதனை ஏற்று நன்றி தெரிவித்த ரஷ்ய அதிபர் தேவைப்பட்டால் உதவிக் கோருவதாகக் கூறினார். இந்த உரையாடலை உறுதி செய்துள்ள வாஷிங்டன் வெள்ளை மாளிகையின் இரு தலைவர்களும் ரஷ்யாவில் பரவிவரும் காட்டுத் தீ குறித்தும் இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம் குறித்தும் பேசியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.