முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் தனது மகளுடன் பொது பேருந்தில் சென்றுள்ளார்.
தமிழ் சினிமாவில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து பின் வெள்ளித்திரையில் நடிகராக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவரை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்புவர். சிவகார்த்திகேயன் தற்போது டாக்டர் மற்றும் அயலான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் மற்றும் அவரது மகள் ஆராதனா ஆகிய இருவரும் பொது பேருந்தில் ஒரு விசேஷத்திற்கு சென்ற பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனைப் பார்க்கும் ரசிகர்கள் எவ்வளவு எளிமையான மனிதர் இவர் என்று புகழ்ந்து வருகின்றனர்.