Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

Flash News: கோர விபத்தில் திமுக நிர்வாகி மரணம்… பெரும் சோகம்…!!!

திருப்பூர் தாராபுரம் பழனி சாலையில் மரத்தின் மீது கார் மோதி திமுக நிர்வாகி பரிதாபமாக உயிரிழந்தார்.

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள். மேலும் பூத் ஸ்லீப் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதுமட்டுமன்றி வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் வாக்களிக்க முடியாது. அதன்படி வாக்காளர்கள் அனைவரும் நீண்ட வரிசையில் நின்று காலை 7 மணிமுதல் வாக்களித்து வருகிறார்கள். ஆனால் பெரும்பாலான இடங்களில் வாக்கு இயந்திரங்கள் கோளாறு ஏற்பட்டதால் வாக்கு செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில் திருப்பூர் தாராபுரம் பழனி சாலையில் மரத்தின் மீது கார் மோதியதில் திமுக நிர்வாகி வீர சுந்தரி என்கிற பழனிசாமி மரணமடைந்தார். வாக்குச் சாவடியிலிருந்து மதிய உணவிற்காக வீட்டிற்கு சென்ற போது சாலையோர மரத்தின் மீது அவர் சென்ற கார் மோதி விபத்துக்குள்ளானது. அந்தக் கோர விபத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Categories

Tech |