இளைஞர் ஒருவர் தான் அதிமுகவுக்கு வாக்களித்ததாக முகநூல் பக்கத்தில் புகைப்படம் பதிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலானது 234 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மக்களும், அரசியல் பிரபலங்களும், திரையுலக பிரபலங்களும் தங்களுடைய ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்கள். மேலும் வாக்கு பதிவானது அமைதியான முறையில் நடைபெற்றதாக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
மேலும் 6 மணிக்கு மேல் கொரோன அறிகுறி உள்ளவர்கள் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களித்த பின்னர் ஏழு மணிக்கு சரியாக தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இந்நிலையில் பேஸ்புக்கில் இளைஞர் ஒருவர் தான் அதிமுக கட்சிக்கு வாக்களித்தாக புகைப்படத்தை பேஸ்புக்கில் பகிர்ந்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கு அவருடைய நண்பர் எப்படி புகைப்படம் எடுக்க அனுமதித்தார்கள்? என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த இளைஞர் பூத்தே நம்ம கண்ட்ரோல் தான் என்று பதிலளித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அதிமுக அமைச்சர் எஸ்.பி வேலுமணி போட்டியிடும் தொண்டாமுத்தூர் தொகுதி என்று கூறப்பட்டுள்ளது.