Categories
தேசிய செய்திகள்

ஓட்டுக்கு ரூ.2000 வாங்கிட்டு…. இப்போ சாலை வசதி கேக்குறீங்க…. நகராட்சித்தலைவரின் கேள்வியால் அதிர்ந்த மக்கள்…!!!

ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் மாவட்டத்திலுள்ள தாடி பத்திரியில் நகராட்சி தலைவராக தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த பிரபாகர் ரெட்டி என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் தங்களுடைய பகுதிக்கு சாலை வசதி ஏற்படுத்தித் தருமாறு நகராட்சி தலைவரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் நீண்ட காலமாக கோரிக்கை நிறைவேறாததால் அந்த பகுதியில் உள்ள மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து அங்கு வந்த நகராட்சி தலைவரான தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த பிரபாகர் ரெட்டி , உங்களுக்கு ஒரு ஓட்டிற்கு 2000 பணம் கொடுத்து தான் ஓட்டு போட்டீர்கள். எனவே ஓட்டு போடாதவர்கள் மட்டுமே என்னை சட்டையை பிடித்து கேள்வி கேட்கலாம் என்றும் கூறியுள்ளார். மேலும் ஓட்டிற்கு பணத்தை வாங்கிவிட்டு சாலை வசதி செய்து தருமாறு கேட்க கூடாது என்று அவர் கூறியதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது .

Categories

Tech |