தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள். மேலும் பூத் ஸ்லீப் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதுமட்டுமன்றி வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் வாக்களிக்க முடியாது. அதன்படி வாக்காளர்கள் அனைவரும் நீண்ட வரிசையில் நின்று காலை 7 மணிமுதல் வாக்களித்தனர். ஆனால் பெரும்பாலான இடங்களில் வாக்கு இயந்திரங்கள் கோளாறு ஏற்பட்டதால் வாக்கு செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து 7 மணிக்கு தேர்தல் முடிவடைந்தது.
இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டை எஸ்ஐஇடி கல்லூரியில் முக ஸ்டாலின் அவரது மகன் உதயநிதி மற்றும் மனைவி துர்காவுடன் இன்று காலை வாக்களித்தார். அப்போது மாஸ்க் அணிந்திருந்த ஸ்டாலின் மனைவி துர்கா, யாருமே மாஸ்க் போடவில்லை என்று கூறினார். ஆனால் அவருடன் வந்த அவரது மகன் உதயநிதியே மாஸ்க் அணியாமல் வந்தார். இதனை குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர்.