Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

அஜித், விஜய் குறித்த கேள்விக்கு ‘நச்’ பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்

தமிழகம் முழுவதும் நேற்று சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இதற்கிடையில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் அந்த தொகுதியில் ஆய்வில் ஈடுபட்டபோது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். திமுக எத்தனை தொகுதியில் வெற்றி பெறும் என மே 2ஆம் தேதி தெரியும்.

நடிகர் அஜித் கருப்பு – சிவப்பு மாஸ்க் அணிந்து வந்ததையும், நடிகர்  விஜய் சைக்கிளில் வந்ததைப் பற்றியும் கேட்டபொழுது இதை பற்றி நீங்கள் அவர்களிடம் கேட்க வேண்டும் என்றும், அது அவர்களுடைய விருப்பம் என்றும் தெரிவித்தார். பெட்ரோல் விலை….. என அப்படியே இழுத்த உதயநிதி நான் பார்க்கல, காலையில் இருந்து இங்க இருக்கேன் என உற்சகமாக, சிரிச்ச முகத்துடன் பதிலளித்தார். இதனை அவரிடம் கேளுங்கள் என தெரிவித்தார்.

Categories

Tech |