தன் கற்பை காக்க போராடியதன் விளைவாக ஆயுள் தண்டனை பெற்று விடுதலை அடைந்த சின்டோயா பிரௌன்.
அமெரிக்காவின் டென்னிஸீ மாகாணத்தை சேர்ந்த சின்டோயா பிரௌன் தனது குழந்தைப் பருவத்தைக் கடினமாக எதிர்கொண்டார். அவரது நண்பர் ஒருவரின் நிர்பந்தத்தால் போதை மருந்து அளிக்கப்பட்டு சிறுவயதிலேயே கூட்டு வன்புணர்வுக்கு ஆளானார். இதை அறிந்த ஜான் ஆலன் என்பவர் பிரௌனை ஏமாற்றி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று தன்னுடன் பாலியல் உறவு கொள்ளச் சொல்லி வற்புறுத்தியுள்ளார்.இந்த நிலையில் தன்னை தற்காத்துக் கொள்வதற்காக ஆலனின் துப்பாக்கியால் பிரௌன் சுட்டுள்ளார்.
இதனை பிரௌன் நீதிமன்றத்தில் தானாகவே ஒப்புக் கொண்டதால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. டென்னிஸீ மாகாணத்தை பொறுத்தவரை ஆயுள் தண்டனை என்பது குறைந்தது 51 ஆண்டுகள் ஆகும். அதன்பிறகுதான் பரோலில் வெளிவறுவதற்குக்கூட விண்ணப்பிக்க முடியும். மேலும் பிரவுன் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று அமெரிக்க திரை நட்சத்திரங்கள் உள்பட பல பிரபலங்கள் தங்கள் கோரிக்கையை முன்வைத்தனர்.
இதன்விளைவாக அவரது தண்டனை காலத்தை குறைத்து விடுதலை செய்ய முடிவெடுத்திருக்கிறது டென்னிஸீ மாகாண நிர்வாகம்.தனது 16-வது வயதில் சிறையில் அடைக்கப்பட்ட பிரவுனின் தற்போதைய வயது 31. இன்னும் அவருக்கு முழு விடுதலை கிடைக்கப்பெறவில்லை. அடுத்த 10 ஆண்டுகள் பிணை அலுவலரை சந்திக்க வேண்டும், ஒரு வேலையில் இருக்க வேண்டும், கவுன்சிலிங் செல்ல வேண்டும் உள்ளிட்ட சில நிபந்தனைகள் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது.