தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள். மேலும் பூத் ஸ்லீப் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து மக்களும், அரசியல் பிரபலங்களும், சினிமா பிரபலங்களும் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.
இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் வாக்களிக்க முடியவில்லை என்று கூறப்பட்டது. ஆனாலும் இது குறித்து தேமுதிக தரப்பில் இருந்து சரியான விளக்கமும் தரப்படவில்லை. மேலும் வாக்காளர் பட்டியலில் இருந்து சசிகலாவின் பெயரும் நீக்கப்பட்டதால் அவரும் நேற்று வாக்களிக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.