இந்த ஆண்டு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று இரவு 7 மணிக்கு கலந்துரையாட போவதாக அறிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால் பள்ளிகள் திறந்த சில நாட்களிலேயே பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
அதனால் பெரும்பாலான மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மீண்டும் மூடப்பட்டுள்ளன. ஆனால் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு கருதி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இந்த ஆண்டு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று இரவு 7 மணிக்கு கலந்துரையாட போவதாக அறிவித்துள்ளார். பரிக்ஷா பே சர்ச்சா என்ற நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோருடன் கலந்துரையாட உள்ளேன். வாழ்வின் கனவுகளை நிறைவேற்ற விரும்பும் மாணவர்கள் இதை ஒரு வாய்ப்பாக கருத வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.