நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.
மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மஹாராஷ்டிராவில் இரவு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று தான் கடந்த வருடம் கொரோனாவால் திடீரென நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டது. எனவே கோடிக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டதால் சொந்த ஊர்களுக்கு நடந்தே சென்றனர்.
வழியில் பலரும் இறந்தனர். இந்த நிலையில் மகாராஷ்டிராவில் இரவு மற்றும் வார இறுதி நாட்கள் ஊரடங்கு தொடங்கியுள்ளதால் முழு ஊரடங்கு வந்துவிடுமோ? என்ற அச்சத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் வெளியேறத் தொடங்கியுள்ளனர்.