Categories
தேசிய செய்திகள்

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களே ரெடியா இருங்க…. இன்று இரவு 7 மணிக்கு – அதிரடி அறிவிப்பு…!!!

இன்று இரவு 7 மணிக்கு இந்த வருடம் தேர்வெழுதும் மாணவர்களுடன் மோடி உரையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வந்ததன் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டது. இதைஎடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்பட்டது. பின்னர் தமிழக அரசு 9-11 ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதாமலேயே ஆல்பாஸ் என்ற மகிழ்ச்சி அறிவிப்பை வெளியிட்டது.

இதையடுத்து மீண்டும் கொரோனா பரவியதன் காரணமாக 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மறு உத்தரவு வரும் வரை ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் மே 3ஆம் தேதி பொதுத்தேர்வு  நடைபெறுவதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களிடம் பிரதமர் மோடி நாளை இரவு 7 மணிக்கு கலந்துரையாட போவதாக அறிவித்துள்ளார். “பரிக்ஷா பே சர்ச்சா” என்ற நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோருடன் கலந்துரையாடவுள்ளேன். வாழ்வின் கனவுகளை நிறைவேற்றி விரும்பும் மாணவர்கள் இதை ஒரு வாய்ப்பாக கருத வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |