தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள். மேலும் பூத் ஸ்லீப் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து மக்களும், அரசியல் பிரபலங்களும், சினிமா பிரபலங்களும் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.
இதையடுத்து சரியாக இரவு 7 மணிக்கு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்தது. இதனை தொடர்ந்து வாக்கு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு, வாக்கு என்னும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும் தமிழகத்தில் உள்ள 75 வாக்கு என்னும் மையங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் மையங்களை விழிப்புடன் கண்காணிக்க வேண்டும். எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்று கூட்டணி கட்சி தோழர்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.