Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இங்க இதுக்கு தான் அதிக மவுசு..! அமோக விளைச்சலால்… விலை திடீர் வீழ்ச்சி..!!

திண்டுக்கல் மாவட்டம் நாகல்நகரில் புளி வரத்து அதிகரிப்பால் வாரச்சந்தையில் புளியின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் சாணார்பட்டி, நத்தம், கோபால்பட்டி ஆகிய பகுதிகளில் அதிக அளவில் புளிய மரங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் உள்ள புளிய மரங்களில் விளையும் புளி அதிக சுவை கொண்டதாக இருக்கும். இதனால் நத்தம் புளி மதுரை, திண்டுக்கல் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. எனவே நத்தம் தாலுகாவில் மக்கள் புளி வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர். இதற்கிடையே கடந்த வருடம் முடிவில் நல்ல மழை பெய்தது. இதன் காரணமாக புளி விளைச்சல் அமோகமாக இருந்தது. தற்போது அவை விளைச்சல் அடைந்து விற்பனைக்கு வர தொடங்கி இருக்கின்றது.

இந்த புளிகள் பறிக்கப்பட்டு வெளியூர்களுக்கு விதைகள் நீக்கி அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் திண்டுக்கல் நாகல்நகரில் புளி சீசன் தொடங்கியதும் திங்கட்கிழமை தோறும் புளி வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த 4-ம் தேதி வியாபாரிகள், விவசாயிகள் என புளி விற்பனையில் 50-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். கடந்த இரண்டு வாரங்களை ஒப்பிடும் போது புளி வரத்து அதிகமாக இருந்தது. இதன் காரணமாக புளியின் விலை குறைந்துள்ளது. அதன்படி விதை நீக்கிய புளி கிலோ ரூ.100 முதல் ரூ.130 வரையும், விதை நீக்காத புளி கிலோ ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்பட்டது.

Categories

Tech |