Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வாக்களிக்க சென்ற முதியவர்… தடுமாற்றத்தால் ஏற்பட்ட தாமதம்… வாக்குச்சாவடி மையத்தில் பரபரப்பு..!!

திண்டுக்கல் மாவட்டம் ராஜகோபாலபுரம் வாக்குச்சாவடி மையத்தில் மூதாட்டிக்கு வாக்களிக்க துணையாக சென்ற அலுவலருக்கு அதிமுக முகவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் ராஜகோபாலபுரத்தில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டிருந்தது. அந்த வாக்குச்சாவடி மையத்திற்கு வாக்களிப்பதற்காக அண்ணாநகரை சேர்ந்த லட்சுமி என்னும் மூதாட்டி வந்திருந்தார். அவர் அங்கு தடுமாறியபடி சென்றார். இதையடுத்து அந்த மூதாட்டிக்கு அங்கிருந்த அலுவலர்கள் துணையாக வாக்களிக்க சென்றனர். அதற்கு அங்கிருந்த அதிமுக முகவர்கள் சிலர் அலுவலர் துணையாக செல்லக்கூடாது. ரத்த சொந்தங்களுடன் தான் வாக்களிக்க செல்ல வேண்டும் என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தானாகவே சென்று மூதாட்டி வாக்களித்தார். இந்த சம்பவத்தால் அரை மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதேபோல் வேடசந்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மல்வார்பட்டி, பூத்தாம்பட்டி, எல்லப்பட்டிபுதூர், சேணன்கோட்டை ஆகிய ஊர்களில் நேற்று வாக்குப்பதிவு வாக்குச்சாவடி மையங்களில் தொடங்கியது. அப்போது திடீரென எந்திரத்தில் பழுது ஏற்பட்டது. இதனால் வாக்குப்பதிவு அரை மணி நேரம் தாமதத்திற்கு பிறகு தொடங்கியது.

Categories

Tech |