Categories
சினிமா தமிழ் சினிமா

கேன்சரால் அவதியுற்ற பிரபல நடிகை…. தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றியதால் பாராட்டு….!!

கேன்சரால் பாதிக்கப்பட்டிருப்பினும் தனது ஜனநாயக கடமையாற்றிய நடிகை சிந்துவை பலரும் பாராட்டி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் வெளியான அங்காடி தெரு திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை சிந்து. இதை தொடர்ந்து பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த இவர் ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். படங்களில் தொடர்ந்து நடித்து வந்த சிந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பணம் இன்றி தவித்து வந்தார்.

இதுகுறித்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதைப் பார்த்த பலரும் சிந்துவிற்கு உதவி செய்த நிலையில் அவரது ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் அவர் தனது வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளார்.

கேன்சர் பாதித்த நிலையிலும் ஓட்டு போட்ட நடிகை

ஓட்டு போட்டு வந்த அவர் ஒரு புகைப்படத்தையும் எடுத்து வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்த பலரும் உடல் நலம் சரியில்லாத நிலையிலும் ஜனநாயக கடமையாற்றிய சிந்துவை பாராட்டி  வருகின்றனர்.

Categories

Tech |