Categories
அரசியல் மாநில செய்திகள்

திருப்தியும் இல்ல, அதிருப்தியும் இல்லை…! ”பயம் வந்துடுச்சு”.. அதான் அப்படி செஞ்சாங்க….!!

சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று தமிழகம் முழுவதும் நடந்து முடிந்தது. குடும்பத்தோடு வாக்களித்த திமுக தலைவர் முக.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசிய போது,  குடும்பத்தோடு வந்து எங்களுடைய ஜனநாயக கடமையை நாங்கள் ஆச்சி இருக்கின்றோம். தமிழ்நாட்டு முழுவதும் அமைதியாக மக்கள் ஆர்வத்தோடு வாக்களித்து கொண்டு இருப்பதாக வந்து கொண்டு இருக்கின்றது.

ஜனநாயக கடைமையை முறையாக தமிழக மக்கள் ஆச்சி கொண்டிருக்கிறார்கள். இதனுடைய முடிவு மே 2ஆம் தேதி சிறப்பாக இருக்கும், அது உறுதி. ஆளுங்கட்சிக்கு எதிர்ப்பாக இருக்கிறது என்பதை நான் தெளிவாக உணர்கிறேன். தேர்தல் ஆணைய நடவடிக்கை திருத்தி என்றும் சொல்லமுடியாது, அதிருப்தி என்றும் சொல்ல முடியாது.

திமுகவின் முக்கிய தொகுதிகளில் தேர்தலை நிறுத்த வேண்டும் என்று மனு கொடுத்தது,  ஆளுங்கட்சியினுடைய தூண்டுதல். தோல்வி பயம் வந்துவிட்ட காரணத்தினால எப்படியாவது தேர்தலை நிறுத்தணும் என்ற   முயற்சில் ஈடுபட்டார்கள். ஆனால் அதற்கு தேர்தல் ஆணையம் சம்மதிக்கவில்லை என்ற செய்தியும் தொடர்ந்து வந்துடுச்சு என ஸ்டாலின் தெரிவித்தார்.

Categories

Tech |