Categories
பல்சுவை மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்…. மொத்தம் 72.78% வாக்குகள் பதிவானது – தலைமை தேர்தல் அதிகாரி…!!!

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள். மேலும் பூத் ஸ்லீப் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதன்படி வாக்காளர்கள் அனைவரும் நீண்ட வரிசையில் நின்று காலை 7 மணிமுதல் வாக்களித்தனர். ஆனால் பெரும்பாலான இடங்களில் வாக்கு இயந்திரங்கள் கோளாறு ஏற்பட்டதால் வாக்கு செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து 7 மணிக்கு தேர்தல் முடிவடைந்தது. இந்நிலையில் தேர்தல் அமைதியான முறையில் நடந்ததாக தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். இந்நிலையில் தமிழகம் முழுவதும் மொத்தம் 72.78% வாக்குகள் பதிவானதாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |