ஒன்பிளஸ் நிறுவனம் அதன் புதிய ஒன்பிளஸ் பே (OnePlus Pay) என்ற கட்டண தளத்தை இந்தியாவில் விரைவில் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்த புதிய பேமெண்ட் தளத்தைப் பற்றி பல கசிவுகள் மற்றும் வதந்திகள் இணையத்தில் லீக் ஆகி வருகிறது. இந்த சேவை ஏற்கனவே சொந்த நாடான சீனாவில் வாலட் பயன்பாட்டின் மூலம் கிடைக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில், ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் தனது தடத்தை ஸ்மார்ட்வாட்ச், ஃபிட்னஸ் பேண்ட், TWS, ஸ்மார்ட் டிவி மற்றும் பல சாதனங்களை அறிமுகம் செய்து விரிவுபடுத்தி வருகிறது.
OnePlus பே அறிமுகப்படுத்தப்பட்டால் அது மிகவும் தாமதமாக பேமெண்ட் சந்தைக்குள் கால் பதிக்கும். இதற்கு முன்பே கூகிள் பே, PhonePe, போன்ற நிறுவனங்கள் தங்களின் தடத்தை இந்தியர்கள் மத்தியில் பதித்துவிட்டதால் ஒன்பிலஸ் பே மக்கள் மத்தியில் இடம் பிடிப்பது சற்று சிரமமான காரியமாக இருக்கும்.