Categories
கிரிக்கெட் விளையாட்டு

“தேர்வில் விராட் கோலி கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும்” கபில் தேவ்..!!

பயிற்சியாளர் தேர்வில் விராட்கோலி உட்பட ஒவொருவரது கருத்துக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்று கபில் தேவ் தெரிவித்துள்ளார் 

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக  இருக்கும் ரவிசாஸ்திரி, பேட்டிங் பயிற்சியாளராக சஞ்சய் பாங்கர், பந்து வீச்சு பயிற்சியாளராக பரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர்  ஆகியோரின் பதவி காலம் உலக கோப்பை தொடருடன் முடிவடைந்தது. இதையடுத்து பிசிசிஐ  இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பை வெளியிட, அதன்படி  விண்ணப்பங்களும் குவிந்த வண்ணம் இருந்த நிலையில் கடந்த 30-ம் தேதி நிறைவடைந்தது.

Image result for ரவிசாஸ்திரி,

இந்த பதவிக்கு தகுதியான நபர்களை தேர்ந்தெடுக்க இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கபில்தேவ் தலைமையில் அன்ஷூமன் கெயிவாட், சாந்தா ரங்கசாமி ஆகிய மூவர் அடங்கிய ஆலோசனை கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களை வருகின்ற ஆகஸ்ட் 13 அல்லது  14 ஆகிய தேதிகளில் தேர்வு செய்ய இருக்கின்றனர்.

Image result for Virat Kohlis opinion on selection should be honored Kapil Dev

இதுகுறித்து இந்திய அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி தொடர வேண்டும் என்று கேப்டன் விராட் கோலி விருப்பம் தெரிவித்தார். விராட் கோலியின் இந்த பதிலுக்கு கமிட்டி உறுப்பினர்கள் ஒருவரான கெயிவாட் கூறும்போது, விராட் கோலியின் கருத்தை நாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது இல்லை. இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் தான் கருத்தில் கொள்ளவேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து கோலிக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக கபில் தேவ் கூறும்போது, “பயிற்சியாளர் தேர்வில் விராட்கோலி உட்பட ஒவொருவரது கருத்துக்கும் மதிப்பளிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

Categories

Tech |