அபுதாபியில் சுகாதார சேவை துறை மக்களிடம் சிறுநீரக பிரச்சனை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
அபுதாபியில் சுகாதார சேவை துறை சிறுநீரக பிரச்சினை குறித்த மருத்துவ கருத்தரங்கம் காணொளி காட்சி மூலம் நடைபெற்றது. அதில் 1800க்கும் மேற்பட்ட மருத்துவ வல்லுநர்கள் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற 32 நாடுகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் அலி அல் ஒபைத்லி கூறியது “உலகில் 10 இல் ஒருவருக்கு சிறுநீரக பிரச்சினை இருப்பதாகவும் அதில் 9 பேருக்கு சிறுநீரக பிரச்சினை இருப்பதே தெரியாமல் இருக்கிறது என்றும் கூறினார்.ஆகையால் சிறுநீரக பிரச்சனை குறித்து பல விழிப்புணர்வுகளை மக்களிடத்தில் ஏற்படுத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால் வரும்கால கட்டத்தில் சிறுநீரக பாதிப்பு அடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து விடும்” என்று கூறியுள்ளார். கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையிலும் இந்த கருத்தரங்கில் பல்வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.