பிரதமர் நரேந்திர மோடி தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்குவதாக இன்று ‘ஆன்லைன்’ மூலம் கலந்துரையாடுகிறார்.
இந்தியாவின் தலை நகரமாக இருக்கும் புதுடெல்லியில் “பரிஷா பே சர்ச்சா” என்ற தலைப்பில் பிரதமர் மோடி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுடன் 2018ஆம் ஆண்டு முதல் கலந்துரையாடி மாணவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகின்றார். அதே போன்று இந்த ஆண்டும் மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சி இன்று இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது.
இது தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார். அதாவது பல்வேறு கேள்விகளுடன் தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள், அவர்களது ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோர் பங்கேற்கும் “பரிக்ஷ பே சர்ச்சா” நிகழ்ச்சி இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் என்று அதில் தெரிவித்துள்ளார். அதில் அவர் பதிவுடன் வெளியிட்டுள்ள வீடியோவில், உங்களை நேரில் சந்தித்து கலந்துரையாட மிகுந்த ஆவலாக இருக்கின்றேன்.
அனால் கடந்த ஒரு வருட காலமாக கொரோனா வைரஸின் பாதிப்பு அதிகளவில் இருப்பதால் நேரில் சந்திக்க முடியவில்லை. எனவே நமது கலந்துரையாடல் ஆன்லைன் வழியாக சிறப்பான முறையில் நடக்கின்றது. அதில் அனைவரும் கலந்து கொண்டு வாழ்வின் கனவுகளை நிறைவேற்ற விரும்பும் மாணவர்கள் தேர்வை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு வெற்றி பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.