Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ராய் லட்சுமிக்கு நிச்சயதார்த்தமா?… அவரே வெளியிட்ட திடீர் பதிவு… ஆனால் அதுல ஒரு டுவிஸ்ட்…!!!

நடிகை ராய் லட்சுமி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் நடிகை ராய் லட்சுமி இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், தாம் தூம், காஞ்சனா, அரண்மனை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் கேங்ஸ்டர் மற்றும் சின்ட்ரெல்லா ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் நடிகை ராய் லட்சுமி தனது திருமணம் குறித்து திடீர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘நீண்ட நாட்களாகவே என்னிடம் பலர் இதை கேட்டு வருகின்றனர். இந்த பிரச்சனையை தீர்க்க முடிவு செய்துவிட்டேன். என் உறவை நான் மறைக்கவில்லை. எனக்கு சில பிரைவசி தேவை மற்றும் என் பார்ட்னரின் வாழ்வை பாதுகாக்க வேண்டும். ஆம் நெருங்கிய நண்பர்களுக்கு கடந்த வாரம் அழைப்பிதழ்களை அனுப்பியுள்ளோம் .

வருகிற ஏப்ரல் 27 அன்று நாங்கள் நிச்சயதார்த்தம் செய்து கொள்ளப் போகிறோம் . என் குடும்பம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் இந்தப் பதிவை வேறு ஒருவரிடமிருந்து நான் திருடியதற்கு காரணம் உங்கள் கைகளை சரியாக கழுவுங்கள் மற்றும் சானிடைசர் பயன்படுத்துங்கள் என்பதை கூறுவதற்காக தான் என டுவிஸ்ட் வைத்து பதிவிட்டுள்ளார். கொரோனா இரண்டாம் அலை தொடங்கியுள்ளதால் தனது ரசிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ராய்லட்சுமி இந்த பதிவை வெளியிட்டுள்ளார். ஆனால் அவர் கூற வந்த விஷயத்தைப் புரிந்துகொள்ளாமல் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர் .

Categories

Tech |