சிவகங்கையில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்காத நிறுவனங்களின் மீது தொழிலாளர்கள் புகார் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தல் நேற்று ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது. தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வசதியாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி அனைத்து தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், கட்டுமான நிறுவனங்கள், ஓட்டல்கள் ஆகிய தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அவ்வாறு வழங்கவில்லை என்றால் அந்த நிறுவனங்கள் மீது குற்றவியல் நடவடிக்கை, தொழிலாளர் சட்டத்தின் படி எடுக்கப்படும்.
இதற்கிடையே சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை விடுமுறை வழங்காத நிறுவனங்கள் மீது புகார் அளிக்க அமைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து புகார் தெரிவிப்பவர்கள் 9442418361, 9025602961, 04575240521, 9865893585 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம் என்று சிவகங்கை மாவட்ட தொழிலாளர் உதவி கமிஷனர் ராஜ்குமார் செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளார்.