‘செம்பருத்தி’ சீரியலில் பிரபல நடிகர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று செம்பருத்தி. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த சீரியல் டிஆர்பியில் உச்சத்தில் இருந்தது. மேலும் இந்த சீரியலில் ஆதி-பார்வதி கதாபாத்திரத்தில் நடித்து வந்த கார்த்திக் ராஜ்-ஷபானாவுக்கு ரசிகர்கள் ஏராளம். ஆனால் திடீரென இந்த சீரியலின் கதாநாயகன் கார்த்திக் விலகிக் கொண்டதால் அவருக்கு பதில் அக்னி அந்தக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
தற்போது செம்பருத்தி சீரியல் 1000 -வது எபிசோடை எட்டி விட்டது . இதனால் சீரியல் குழுவினர் ஸ்பெஷல் கொண்டாட்டத்தில் உள்ளனர். இந்நிலையில் செம்பருத்தி சீரியலில் பிரபல சீரியல் நடிகர் ஸ்ரீ இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர் இந்த சீரியலின் நாயகி ஷபானாவுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.