Categories
உலக செய்திகள்

வீட்டிற்கு பின் புதைக்கப்பட்ட பெட்டி…? எனக்கு புதையல் கிடைத்துவிட்டது…. திறந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

செப்டிக் டேங்க் தொட்டியை புதையல் என நினைத்து திறந்த வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.

Tony Huisman என்பவர் வீடு ஒன்று வாங்கியுள்ளார். அப்போது அவரின் வீட்டின் பின்னால் இருந்த காங்கிரட் பெட்டி ஒன்றை பார்த்துள்ளார். Tony அது புதையலாக இருக்குமோ என்று எண்ணி அந்த காங்கிரட் மூடியைத் திறக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அந்த மூடி மிகவும் கனமாக இருந்ததால் கடப்பாரை கம்பி ஒன்றினால் திறந்துள்ளார். தனது வாழ்வில் நடக்கும் எந்த ஒரு சம்பவத்தையும் வீடியோவாக எடுக்கும் பழக்கம் அவரிடம் இருந்துள்ளது.

அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு மக்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என்று எண்ணியுள்ளார். ஆனால் அந்த மூடியைத் திறந்ததும் Tonyக்கு எதிர்பாராத அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் அதில் இருந்தது புதையல் இல்லை அவரது வீட்டின் செப்டிக் டேங்க். அதனைத் திறந்ததும் துர்நாற்றம் தாங்காமல் ஓடிவிட்டார். ஆனால் அவரது வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.

Categories

Tech |