Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“சமாதானம் பேச அழைத்து” மனைவியை குத்திக்கொலை செய்த கணவன்..!!

திருப்பூரில் சேர்ந்து வாழ்வதற்கு சமாதானம் பேச தாய் வீட்டிற்கு அழைத்து சென்று கணவன் மனைவியை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூரில் உள்ள டி.எம்.எஸ் நகரை சேர்ந்த ரமேஷ் மற்றும் பிரியா ஆகிய இருவரும் 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்த ஜோடிக்கு  ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களாகவே இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன்  காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

Related image

இந்நிலையில்  மனைவி பிரியாவுடன் சேர்ந்து வாழ்வதற்கு கலந்து பேச ரமேஷ் தனது தாயார் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். வீட்டில் வைத்து சமாதானம் பேசி கொண்டிருக்கும் போது இருவருக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.  வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த ரமேஷ் மனைவி பிரியாவை கத்தியால் சரமாரியாக குத்தி உள்ளார்.

Image result for குத்திக்கொலை

இதையடுத்து அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வேகமாக வீட்டிற்கு வந்து, ரமேஷை தடுத்து நிறுத்தி விட்டு உடனே காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். பின்னர்  விரைந்து வந்த காவல்துறையினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த பிரியாவை தங்களது வாகனத்திலேயே மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து கணவன் ரமேஷை  காவல்துறையினர்  கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |