Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

குறைஞ்ச விலையில் கிடைக்கும் வாழைப் பழத்தில்… இவ்ளோ நன்மைகளா ? அப்போ… இனி மேல்… இத வேஸ்ட் பண்ணாதீங்க..!!

நாம் எளிதில் கிடைக்கும் வாழைபழத்தை விட, எங்கிருந்தோ விளைந்து வரும் ஸ்ட்ராபெரி,  அவகோடா, ஜெர்ரி போன்ற பழங்களை தான் அதிகம் விரும்புகிறோம். எனவே வாழைப்பழத்திலுள்ள ஊட்டச்சத்துக்களை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: 

ஏழைகளுக்கு ஏற்ற பழங்களில் முக்கியமானதாக இருக்கும் பழம் வாழைப்பழம். இது பொதுவாக எல்லா காலத்திலும், எல்லா இடங்களிலும்  அனைவராலும் குறைந்த விலையில் கிடைப்பது தான் வாழைப்பழம். இந்த வாழைப்பழத்தில் உள்ள சத்துக்களால் உருவாகும் நன்மைகளால் அவற்றின் பெருமைகளை பற்றி பலருக்கும் தெரியாமலிருக்கிறது. இந்த வாழைபழத்தில் நம் உடம்பிற்கு தேவையான சத்துகள், வைட்டமின்கள் இந்த பழத்தில் அதிகம் இருப்பதே பலருக்கும் தெரியாமலே இருக்கின்றன. எனவே ஆப்பிள் பழத்தை விட வாழைபழமே அதிகளவு சிறந்ததாகவே இருக்கின்றது.

மேலும் ஆப்பிள் பழத்திலுள்ள கார்போஹைட்ரேட்டை விட, இந்த வாழைபழத்தில் அதிகளவு கார்போஹைட்ரேட்  நிறைந்துள்ளது.  மேலும் இதில் பாஸ்பரஸ், புரோட்டீன், வைட்டமின் ஏ ,இரும்புசத்துக்கள் அதிகளவு நிறைந்துள்ளது. பொட்டாசியம் சத்தும் வாழைப்பழத்தில் அதிகமாகவே உள்ளது. ஒரு வாழைப்பழத்தில் சுமார் 23 கிராம் கார்போஹைட்ரேட் சத்துக்களும், 12 கிராம் அளவில் சர்க்கரையும், 2.6 கிராமில் நார்சத்துகளும், ஒரு கிராம் அளவில்கொழுப்பு சத்துக்களும், 9 மில்லி கராம் வைட்டமின் சி சத்துக்களும் நிறைந்துள்ளது.

நரம்புக்கு வலு சேர்த்து புத்துணர்ச்சி தருகிறது:

இந்த வாழைபழத்தில் உள்ள சர்க்கரையில் இருக்கின்ற சுக்ரோஸ், பீக்டோஸ், குளுக்கோஸ் ஆகியநுண்ணுட்ட சத்துக்களும் இதில் நிறைந்துள்ளது. மேலும் இதில் ஜீரணத்சக்தியை ஏற்படுத்தும் நார்ச்சத்துகளும் நிறைந்துள்ளதால், இது உடலுக்கு உடனடியாக புத்துணர்ச்சி கொடுக்கும் ஆற்றல் நிறைந்துள்ளது.

பொதுவாக இந்த வாழைபழத்தை நாள்தோறும் தடகள வீரர்கள் அதிகளவு உணவில் சேர்த்து கொள்ளுகின்றனர். பயிற்சி செய்யும் போது அதிகளவு சோர்வை போக்க வாழைப்பழம் பெரிதும் உதவுகிறது. மேலும் இதில் வைட்டமின் பி சத்துக்கள் நிறைந்துள்ளதால், இது நரம்பு மண்டலத்தில் வலு சேர்க்கவும், ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் உதவுகிறது.

நிக்கோடினில் இருந்து பாதுகாக்க உதவுகிறது:

வாழைபழங்களை அதிகளவு உணவில் சேர்ப்பதால், புகைபிடிக்கும் பழக்கமுடைய நபர்களில சிலர், இந்த பழக்கத்தை திடீர்ரென்று பாதியிலேயே விட்டு விடவும் இது உதவுகிறது. எனவே இப்பழக்கத்தினால் அதிலுள்ள நிக்கோடின் என்ற நச்சுபொருள் உள்ளதால், இது உடம்பில் அதிகளவு படிந்து விடுவதால், வாழைப்பழத்தை உணவில் சேர்ப்பதால்அதிலுள்ள பி6, பி12 என்ற வைட்டமின்கள், பொட்டாசியம் மெக்னீசியம் போன்ற  சத்துக்கள், உடம்பில் படிந்திருக்கும் நிக்கோடினை சிறிது, சிறிதாக உடம்பிலிருந்து வெளியேற்றவும் பெரிதும் உதவுகிறது.

Categories

Tech |