Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்… சற்று நேரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பாக இன்னும் சற்று நேரத்தில் முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வு களை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். ஆனால் தமிழகத்தில் கடந்த 2 வாரமாக கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். இதற்கு மத்தியில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்ததால், ஊரடங்கு குறித்த எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கொரோனா கட்டுப்பாடுகள் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி திரிபாதி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த ஆலோசனை முடிந்த உடன் கட்டுப்பாடுகள் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.

Categories

Tech |