தனுஷ் மற்றும் நயன்தாராவின் படங்கள் ஒரே நாளில் வெளியாக உள்ளது பெரும் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் கர்ணன். இப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ரெஜினா விஜயன் நடித்துள்ளார். தமிழில் உருவாகியுள்ள இப்படத்தினை மலையாளத்தில் டப்பிங் செய்து கேரளா வெளியீட்டு உரிமையை பிரபல மலையாள நடிகர் மோகன்லால் கைப்பற்றியுள்ளார்.
அதன்படி வரும் ஏப்ரல் 9ஆம் தேதி இத்திரைப்படம் ரிலீசாக உள்ளது. இதேபோல் பிரபல முன்னணி நடிகை நயன்தாராவின் நடிப்பில் மலையாளத்தில் உருவாகியுள்ள படம் நிழல். இப்படத்தில் குஞ்சாக்கோ போபன் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் அப்பு என்கின்ற படத்தொகுப்பாளர் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.
திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படமும் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதியே ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. ஆகையால் தனுஷ் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரின் படமம் ஒரே நாளில் ரிலீசாவது பெரும் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.