ஹாக்கி வீரர் உறுப்பு தானம் செய்ததை கவுரவிக்கும் விதமாகவும் மற்ற வீரர்கள் நினைவாகவும் Green shirt Dayவை கனடா கொண்டாடி வருகிறது.
கனடாவில் Saskatchewan நகரத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஹாக்கி வீரர்கள் 16 பேர் சென்ற பேருந்து லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த வீரர் லோகன் தனது பெற்றோர் சம்மதத்துடன் உறுப்பு தானம் பதிவு செய்திருந்தார். அதனால் அவர் இறந்த பிறகு ஆறு பேருக்கு உடல் தானம் செய்யப்பட்டுள்ளது.
கனடாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு இதய மாற்று அறுவை சிகிச்சைகள் நடைபெற்றுள்ளன. அதில் எங்களது மகனின் இதயமும் உள்ளது என்று லோகன் தாய்-தந்தையர் கூறியுள்ளனர். இந்நிலையில் நாம் திரைப்படத்தில் காண்பது போல லோகனின் தாய்க்கும் தனது மகனின் இதயத்துடிப்பை கேட்க வேண்டும் என்கிற ஆசை உள்ளது என கூறியுள்ளார்.
ஆனால் கனடாவில் தானம் அளித்தவர்களின் குடும்பத்தினரும் தானம் பெற்றவரின் குடும்பத்தினரும் சந்தித்துக் கொள்வது சட்டப்படி குற்றமாகும். அதனால் அந்தத் தாயின் ஆசை நிறைவேறவில்லை. கனடா லோகன் உறுப்புதானம் செய்யும் விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காகவும் விபத்தில் பலியான ஹாக்கி வீரர்களை கௌரவிக்கும் வகையில் அவர்கள் பச்சை நிற சீருடை அணிந்திருந்ததால் ஏப்ரல் 7ஆம் தேதியை Green shirt Day வாக கொண்டாடி வருகிறது.