Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“எங்க உரிமையை விட்டு குடுக்க மாட்டோம்”… தள்ளாடும் வயதிலும்… தவறாமல் வாக்குப்பதிவு..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 102 வயதிலும் மூதாட்டிகள் தவறாமல் வாக்குப்பதிவு செய்தனர்.

தமிழகம் முழுவதும் நேற்று சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இதில் வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையான வாக்குப்பதிவை செய்துள்ளனர். வாக்களிப்பது என்பது நம் அனைவருடைய ஜனநாயக கடமை ஆகும். அந்த கடமையை தவறாமல் முதியவர்களும் வந்து வாக்களித்தனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அனைவரின் கடமையையும் உணர்த்தும் விதமாக 102 வயதில் கையில் கம்பு ஊன்றி ஒரு மூதாட்டியும், மற்றொரு மூதாட்டி தள்ளுவண்டியில் வந்தும் தங்களது வாக்கை பதிவு செய்தனர். மேலும் இதே போன்று மாவட்டம் முழுவதும் பல முதியவர்களும் வந்து வாக்களித்து தங்களது ஜனநாயாக கடமையை நிறைவேற்றினர்.

Categories

Tech |