Categories
உலக செய்திகள்

நதியை காலி செய்ய முடிவெடுத்துள்ள அதிகாரிகள்.. படகு சவாரிக்கு தடை.. வெளியான தகவல்..!!

ஜெனீவாவில் நதி ஒன்றில் தண்ணீரை வெளியேற்ற அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஜெனீவா நாட்டில் உள்ள Rhone என்ற நதியின் இடையில் verbois என்ற ஒரு அணை கட்டப்பட்டிருக்கிறது. இந்நிலையில் அதிகாரிகள் இந்த அணையில் உள்ள தண்ணீரை வெளியேற்ற முடிவு எடுத்துள்ளார்கள். வரும் மே மாதம் 18ஆம் தேதியன்று இந்த அணை திறக்கப்படவுள்ளது.

அதன்பின்பு நதியில் இருக்கும் அனைத்து நீரும் வெளியேற்றப்படும். அதாவது அந்த அணைக்கு பின் பகுதியில் படிந்திருக்கும் சகதியை நீக்க சில வருடங்களுக்கு ஒரு முறை இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எனவே நதிக்கரையில் நடப்பதிலிருந்து படகு சவாரி செய்வது வரை அனைத்தும் தடை செய்யப்படுகிறது. அதன் பின்பு ஜூன் மாதத்தில் 5-ஆம் தேதியன்று நதி மறுபடியும் பழைய நிலைக்கு மாறிவிடும்.

Categories

Tech |