விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் காற்றின் மொழி சீரியல் விரைவில் முடிவடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதில் பாரதிகண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ், ராஜாராணி 2 உள்ளிட்ட சீரியல்கள் தொடர்ந்து டி.ஆர்.பியில் முன்னணியில் இருந்து வருகிறது. இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் காற்றின் மொழி சீரியல் விரைவில் முடிவடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து இந்த சீரியலின் கதாநாயகன் சஞ்சீவ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘நான் எங்கேயும் போகவில்லை, விரைவில் எனது அடுத்த சீரியல் குறித்து அறிவிக்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார். இந்த சீரியல் நிறைவடைவதால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.