Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி: 144 தடை உத்தரவு அமல் – அரசு அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.

மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடுமையான கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் பின்பற்றப்பட்டு வருகிறது. பெங்களூருவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக இன்று முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் மறு உத்தரவு வரும் வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் மகாராஷ்ட்ரா, கேரளா, பஞ்சாப்பில் இருந்து பெங்களூரு செல்வோருக்கு கொரோனா சான்றிதழ் கட்டாயம் என்று அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories

Tech |