திருநெல்வேலியில் சட்டமன்ற தேர்தலையொட்டி மக்களுக்கு பணம் பட்டுவாடா செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தமிழகத்தின் ஏப்ரல் மாதம் கடந்த 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலை முன்னிட்டு பொதுமக்களுக்கு பணம் பட்டுவாடா நடைபெறாமலிருக்க தேர்தல் குழு அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினர் நியமித்தது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தொகுதியிலிருக்கும் கூத்தன்குளத்திற்கு தேர்தல் நாளன்று பறக்கும் படையினர் திடீரென்று ரோந்தில் ஈடுபட்டனர்.
அப்போது காங்கிரஸ் கமிட்டியின் தலைவரான மயில்ராஜன் என்பவர் அப்பகுதி மக்களுக்கு பணம் கொடுத்துக் கொண்டிருந்தார். அவரை கையும் களவுமாக பிடித்த பறக்கும் படையினர் மயில்ராஜனிடமிருந்த 8,000 ரூபாயை பறிமுதல் செய்ததோடு மட்டுமல்லாமல் மூலைக்கரைப்பட்டி காவல் நிலையத்திலும் ஒப்படைத்தனர். இதனையடுத்து காவல்துறையினர் இவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.