ஜம்முவில் பயங்கவாதிகளுக்கும் , பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 2 பாதுகாப்புபடை வீரர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஜம்முவில் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கும் , ராணுவ வீரர்களுக்கு தொடர்ந்து சண்டை ஏற்பட்டுக் கொண்டு இருக்கின்றது. கடந்த ஜூலை 31_ஆம் தேதி அங்குள்ள கன்சல்வான் கிராமத்தில் தீவிரவாதிகளுடன் ஏற்பட்ட மோதலில் பாதுகாப்பு படையினரால் 2 பாயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரின் சோபியன் மாவட்டத்திலுள்ள பந்தோஷன் கிராமத்தில் இன்று அதிகாலை பயங்கரவாதிகளுக்கும் , பாதுகாப்பு படையினருக்கும் மோதல் நடந்தது. தொடர்ந்து நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். காயமடைந்த ராணுவ வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படு சிகிச்சை பெற்று வருகின்றனர்.