Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘மாஸ்டர்’ ஹிந்தி ரீமேக்… படத்தை இயக்கும் பிரபல நடிகர்?… தீயாய் பரவும் தகவல்…!!!

மாஸ்டர் படத்தின் ஹிந்தி ரீமேக்கை நடிகர் பிரபுதேவா இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் மாஸ்டர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் வசூலை வாரிக் குவித்தது. தற்போது மாஸ்டர் திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. மேலும் இதில் நடிகர் சல்மான்கான் ஹீரோவாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது .

Prabhu Deva directed movie to go the Master way! Tamil Movie, Music Reviews  and News

இந்நிலையில் மாஸ்டர் ஹிந்தி ரீமேக்கை நடிகர் பிரபுதேவா இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பிரபுதேவா விஜய் நடிப்பில் வெளியான போக்கிரி படத்தை ஹிந்தியில் சல்மான்கானை வைத்து ‘வான்டட்’ என்ற பெயரில்  இயக்கியிருந்தார். இதைத்தொடர்ந்து பல ஹிந்தி திரைப்படங்களை இயக்கிய இவர் சல்மான்கானை வைத்து தபாங் 3 படத்தை இயக்கினார். தற்போது பிரபுதேவா மீண்டும் நடிகர் சல்மான்கானை வைத்து ராதே படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

Categories

Tech |