Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எங்களுக்கு இது தான் முதல் முறை..! ரொம்ப சந்தோஷமா இருக்கு… இளம் வாக்காளர்கள் கருத்து..!!

சிவகங்கை மாவட்டத்தில் இளம் வாக்காளர்கள் முதன்முறையாக வாக்களித்தது பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்ததாக கூறினர்.

சிவகங்கை மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த நான்கு சட்டசபை தொகுதிகளிலும் 18 வயது நிரம்பியவர்கள் 26,634 பேர் நேற்று நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் முதன் முதலாக வாக்களித்தனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் வசித்து வரும் மதுமிதா இதுகுறித்து கூறும்போது, முதன்முறையாக இந்த தேர்தலில் வாக்களித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் மன நிம்மதியையும் தருகிறது. இனிவரும் அரசு என்னை போன்ற இளைஞர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரவேண்டும்.

மக்களுக்கு இலவசம் வழங்குவதை தவிர்த்து வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும். அதேபோல் திருப்புவனம் பகுதியில் வசித்து வரும் வேணுப்பிரியா கூறும்போது, இந்த தேர்தலில் எனது முதல் வாக்கை செலுத்தியது மிகவும் பெருமையாக உள்ளது. அனைவருடைய ஜனநாயக கடமை வாக்களிப்பது ஆகும். ஒரு விரல் புரட்சி நல்ல முதலமைச்சரை தேர்ந்தெடுக்க காரணமாக அமையும் என்றார். மேலும் பல இளைஞர்களும் முதல் முறையாக வாக்களித்து தங்களது கருத்துகளை கூறினர்.

Categories

Tech |