ஜெர்மனியில் கொரோனாவை தொடர்ந்து பனி பொழிவால் விபத்துகளும் அதிகரித்து வருகின்றது.
உலகையே அச்சுறுத்திய கொரோனா வைரஸ் கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவின் வுவான் நகரில் தோன்றியது. இதன் தாக்கம் கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஜெர்மனியில் கொரோனா தொற்று அதிகமாகி வரும் நிலையில் தற்போது புதிய பாதிப்பு ஒன்று ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் கோடை காலத்தை எதிர்பார்த்த நிலையில் தற்போது குளிர்காலம் நிலவி வருகிறது.
இதனால் சாலைகளில் பனி உறைவு ஏற்பட்டு விபத்துக்கள், போக்குவரத்து நெரிசல் போன்ற பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனிடையே Lower saxoney சாலையில் பனியில் சறுக்கி மரத்தின் மீது கார் மோதியதால் ஓட்டுநர் ஒருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து Thirngia பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது . இந்நிலையில் ஜெர்மனியில் பல விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்