சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூரில் வாக்குச்சாவடிகள் நேற்று மதிய நேரத்தில் வெறிச்சோடி காணப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஒன்றியத்தில் நேற்று தேர்தலை முன்னிட்டு பெரும்பாலான வாக்குச்சாவடி மையங்களில் காலை 7 மணி முதலே கோடை வெயில் வாட்டி வதைக்கும் என்ற காரணத்தினால் வாக்காளர்கள் வாக்களிக்க அதிக அளவில் வந்த வண்ணம் இருந்தனர். ஆனால் ஓரிரு நாட்களுக்கு முன்பு வெயிலின் தாக்கம் சாரல் மழை காரணமாக சற்று குறைந்து காணப்பட்டது.
இந்நிலையில் மதிய நேரத்தில் பெரும்பாலான வாக்குச்சாவடி மையங்கள் வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டது. நேற்று மாலை 4 மணிக்கு மேல் மீதமிருந்த முதியோர்கள், வாக்காளர்கள் தங்களது வாக்குகளை வாக்குச்சாவடி மையத்தில் பதிவு செய்தனர்.