தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் அனைவரும் நீண்ட வரிசையில் நின்று காலை 7 மணிமுதல் வாக்களித்தனர். இதையடுத்து இரவு 7 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
இந்நிலையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் பிரச்சாரத்திற்கு வருவதுபோல புடவையில் தாமரை முத்திரையை அணிந்து வந்தார். இது தொடர்பாக அவர் மீது தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக உதயநிதி ஸ்டாலின் திமுக சின்னத்தை அணிந்து வந்து வாக்களித்ததாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் வானதி சீனிவாசன் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.