கொரோனாவால் கடந்த 6 மாதங்களில் பாதிப்படைந்தவர்களுக்கு கடும் பக்க விளைவுகள் ஏற்படும் என்ற அதிர்ச்சி தகவலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனாவால் கடந்த ஆறு மாதங்களாக பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மனச்சோர்வு, மன நோய், பக்கவாதம், பைத்தியம் போன்றவை ஏற்படுவதற்கும் வாய்ப்பு இருப்பதாக அதிர்ச்சித் தகவலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்பு கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களில் மூன்றில் ஒரு பகுதி நபர்களுக்கு மனரீதியாகவும் உளவியல் அல்லது நரம்பியல் பிரச்சனைகள் ஏற்பட்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் மருத்துவமனை மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகளில் இருக்கும் நோயாளிகளுக்கு மேலும் ஆபத்து அதிகம் ஏற்பட்டுள்ளதாக கண்டறிந்துள்ளனர். இதனால் மன அழுத்தத்திற்கான விளைவுகள் மற்றும் மூளையின் நேரடியாக வைரஸ் தாக்கக்கூடிய வாய்ப்புகள் ஏற்படலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
இங்கிலாந்து விஞ்ஞானிகள் அமெரிக்காவில் உள்ள 5 லட்சத்திற்கும் மேற்பட்ட நோயாளிகளுடைய மின்னணு மருத்துவ பதிவுகளை ஆராய்ச்சி செய்துள்ளனர். இதில் 14 பொதுவான உளவியலோ அல்லது நரம்பியல் பாதிப்புகளில் ஏதேனும் ஒன்று நோயாளிகளை தாக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.