Categories
உலக செய்திகள்

திருமதி இலங்கை பட்டம் பெற்ற பெண் …நொடியில் பறிக்கப்பட்ட பட்டம்…என்ன நடந்தது தெரியுமா ?…!!!

இலங்கையில் 2021 ஆண்டிற்கான திருமதி பட்டம் அளிக்கப் பட்ட பெண்ணிடம் இருந்து அதை இலங்கை அரசு திரும்பப் பெற்றது.

இலங்கையில் ஆண்டுதோறும் திருமதி இலங்கை என்ற பட்டம் வழங்கப்படும். அதே போன்று இந்த வருடமும் 2021 காண திருமதி இலங்கை பட்டம் புஷ்பிகா டி  சில்வா என்ற பெண்ணுக்கு வழங்கப்பட்டது. மேலும் பட்டம் வழங்கப்பட்ட சில நிமிடத்திலேயே மீண்டும் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டு இந்த பட்டத்திற்கு அவர் தகுதியானவர் இல்லை என்று கடந்த வருடம் பட்டம் பெற்ற கரோலின் என்பவர் கூறியுள்ளார் மேலும் அந்தப் பட்டத்தை இரண்டாம் இடம் பிடித்தவருக்கு வழங்கினார்கள் .

புஷ்பிகாவிடமிருந்து கரோலின் வேகமாக படத்தை எடுத்ததால்  புஷ்பிகா தலையில் காயம் ஏற்பட்டது. மேலும் புஷ்பிகா விசாரித்தபோது அவர் கணவரை பிரிந்து வாழ்வது உண்மைதான் ஆனால் விவாகரத்து பெறவில்லை என்பதை செய்தியளர்களிடம்  தெரிவித்தார். ஆகையால் மீண்டும்  புஷ்பிகாவிற்கே திருமதி  இலங்கை பட்டத்தை வழங்கினார்கள்.

புஷ்பிகா பட்டத்தை பெற்ற பிறகு குழந்தைகளை தனியாக வளர்த்து கஷ்டப்படும் ஒற்றை தாய்மார்களுக்கு இந்த இலங்கை திருமதி பட்டத்தை அர்ப்பணிப்பதாக கூறியுள்ளார். என்னை போன்ற ஒற்றை தாய்மார்கள் இலங்கையில் அதிகம் காணப்படுவதால் இந்த கிரீடம் அவர்களுக்கே உரியது என்று தெரிவித்தார். புஷ்பிகாவிடமிருந்து கிரீடத்தை பிடுங்கியதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து திருமதி இலங்கை உலகின் தேசிய இயக்குனர் சந்திமல் ஜெயசிங்கே  பிபிசியிடம், கிரீடம் புஷ்பிகாவுக்கு திரும்ப வழங்கியது  பெருமைக்குரியது என கூறியுள்ளார். கரோலின் ஜூரி அவ்வாறு மேடையில் நடந்து கொண்டதற்காக அவர் மீது திருமதி உலக அமைப்பு தொடர்பான விசாரணை ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜெயசிங்கே  தெரிவித்துள்ளார்.

Categories

Tech |