Categories
தேசிய செய்திகள்

அடுத்த நான்கு வாரங்கள் – மத்திய அரசு அதிர்ச்சி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.

மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடுமையான கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனாவின் இரண்டாம் அலை அதி விரைவாக பரவி வருகிறது.

எனவே கொரோனா பரவலின்  அடுத்த நான்கு வாரங்கள் மிகவும் முக்கியமான காலகட்டம் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. இதில் மக்கள் மிக பாதுகாப்பாக இருக்க வேண்டும். அம்மாநிலங்களின் கொரோன நிலையைப் பொருத்து மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்று கூறியுள்ளது.

Categories

Tech |