Categories
கிரிக்கெட் விளையாட்டு

7 நாட்கள் கோரண்டைன் முடித்த ‘பொல்லார்டு’… ஆர்சிபி -யுடன் மீண்டும் இணைந்த ‘தேவ்தத் படிக்கல்’ …!!!

சென்னையில் நடைபெறும்,14வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில்,மும்பை இந்தியன்ஸ் – ஆர்சிபி அணிகள் மோதுகின்றன.

14வது ஐபிஎல் தொடர் நாளை  சென்னையில் நடைபெறுகிறது. இந்த முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – ஆர்சிபி அணிகள் மோதிக் கொள்கின்றனர். இதற்காக இரண்டு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.  பயிற்சியில் ஈடுபட்டுள்ள புகைப்படத்தை மும்பை இந்தியன்ஸ் அணி  சமூக வலைதளங்களில் பதிவிட்டது. ஆனால் அந்தப் புகைப்படங்களில் மும்பை அணியின்  வீரரான பொல்லார்டு, எந்த ஒரு புகைப்படத்திலும் இடம்பெறவில்லை. இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸில்  பொல்லார்டு விளையாட மாட்டாரா, என்று ரசிகர்களிடையே கேள்வி எழுந்தது.

இதைப்பற்றி மும்பை இந்தியன்ஸ் அணி கூறுகையில், பொல்லார்டு , கொரோனா தடுப்பு நடவடிக்கையின் படி 7 நாட்கள் கோரண்டைனில் இருந்து உள்ளார்  . அவருடைய கோரண்டைன்  முடிந்ததால் , மீண்டும் அணியுடன் பயிற்சியை மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன், ஆர்சிபி அணியின் தொடக்க வீரரான படிக்கல் கொரோனா  தொற்றால் , பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டார். தற்போது அவர் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்து விட்டதால், மீண்டும் அணியுடன் இணைய உள்ளார். ஆனால் தற்போது தொடங்க உள்ள முதல் போட்டியில் அவர் விளையாடமாட்டார் என்று தெரிவித்துள்ளனர் .

Categories

Tech |