இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சமூக வலைதளங்கள் மூலமாக ஆபாச இணையதளங்களை பார்ப்பதனால் சீரழிந்து வருகின்றனர். மேலும் பல்வேறு பாலியல் வன்கொடுமைகளும் பெண் குழந்தைகளுக்கு அரங்கேறி வருகிறது. அரசு இவர்களுக்கு கடுமையான தண்டனையை கொடுத்து வருகிறது. இருப்பினும் ஆபாச தளங்களில் வீடியோ பார்ப்பது இன்னும் குறையவில்லை.
இதற்கு தடைகள் விதிக்கப்பட்டும் அதிகம் பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாலியல் பலாத்காரம், கட்டாய பாலியல் உறவுகள் ஆகியவற்றின் வீடியோக்கள் ஆபாச வீடியோ தளங்களில் அதிகம் பார்க்கப்பட்டு வருவதாக பிரிட்டனிலுள்ள டர்ஹாம் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த வீடியோக்கள் குழந்தைகளையும் கொண்டிருப்பதாகவும், இது இளம் வயதினர் அதிகம் பார்ப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.