Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு?… மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடிஇன்று ஆலோசனை….!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுமட்டுமன்றி பெரும்பாலான நாடுகளில் கொரோனா  இரண்டாவது அலை பரவ தொடங்கியுள்ளது.

அதனால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் சூழல் உருவாகியுள்ளது. மேலும் உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளன.மேலும் இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை பரவத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக இன்று  அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இன்று ஒருநாள் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டிய நிலையில் ஆலோசனை நடத்தப்படுகிறது. மருத்துவ நிபுணர்கள் சிறு ஊரடங்கு அமல்படுத்த செய்த நிலையில் இன்று  ஊரடங்கு குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என கூறப்படுகிறது.

Categories

Tech |