Categories
உலக செய்திகள்

இலங்கையில் அதிகமா இருக்காங்க…. இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை…. அரசின் அதிரடி முடிவு….!!

பிரிவினைவாத இஸ்லாமிய அமைப்புகளுக்கு இலங்கை அரசாங்கம் திடீர் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

இலங்கை அரசாங்கம் பிரிவினைவாத இஸ்லாமிய அமைப்புகள் மீது தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. இதில் 11 பிரிவினைவாத இஸ்லாமிய அமைப்புகள் இருப்பதோடு அதில் அதிகமான அமைப்புகள் இலங்கைக்குள் செயல்பட்டு கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளது. அதனால் இந்த அமைப்புகளை தடை செய்வதற்கான அனுமதியை சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா வழங்கியுள்ளதாக ஒருங்கிணைப்பு அதிகாரி  நிஷார ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.

அதன்படி தடைசெய்யப்பட்ட அமைப்புகளைவது: ஐக்கிய தவ்ஹீத் ஜமாத் (UTJ), சிலோன் தவ்ஹீத் ஜமாத் (CTJ), ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ), அகில இலங்கை தவ்ஹீத் ஜமாத் (ACTJ), ஜம்மியதுல் ஹன்சாரி துன்னத்துல் முகமதியா (JASM), தாருல் அதர் @ ஜம் உல் அதர், இலங்கை இஸ்லாமிய மாணவ அமைப்பு / ஜமியா (SLISM), ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு (ISIS), அல் குவைதா (AL-Qaeda) அமைப்பு, சேவ் த பர்ல்ஸ் அமைப்பு (Save the pearls), சூப்பர் முஸ்லிம் அமைப்பு (Super Muslim).

Categories

Tech |